Categories
சினிமா தமிழ் சினிமா

“அப்பவே ஹின்ட் கொடுத்த ரஜினி”…. நமக்கு தான் புரியலப்பா…. தலைவர் குறித்து பேசும் நெட்டிசன்ஸ்….!!!!!

ரஜினிகாந்த் அப்பவே தெளிவாக க்ளூ கொடுத்திருக்கின்றார் என நெட்டிசன்கள் இணையத்தில் பேசி வருகின்றார்கள்.

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்றார் ரஜினிகாந்த். இவர் அரசியலுக்கு வரவேண்டும் என ரசிகர்கள் ஆசைப்பட்டு வந்த நிலையில் சென்ற 2020 ஆம் வருடம் இப்ப இல்லன்னா எப்பவும் இல்லை எனக் கூறி அரசியலுக்கு வருவதை அறிவித்தார். ஆனால் உடல்நல பிரச்சனையால் அரசியலுக்கு வர முடியவில்லை என விலகினார். தற்பொழுது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

ரஜினி தனது 170-வது திரைப்படத்துடன் நடிப்புக்கு முழுக்கு போடுகின்றார் என சொல்லப்பட்ட நிலையில் லைகா நிறுவன தயாரிப்பில் இரண்டு திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த நிலையில் ரஜினி தன்னுடைய பிறந்தநாளுக்கு இப்போ இல்லனா எப்பவும் இல்லை என்பதை ஆங்கிலத்தில் எழுதிய கேக் வெட்டினார். அதில் நெவெர் என்கின்ற வார்த்தையில் தான் கத்தியை வைத்தார் ரஜினிகாந்த். அந்த புகைப்படமானது தற்போது இணையத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றது. எப்பவும் இல்லை என்று ரஜினி அன்றே சொல்லாமல் சொல்லிவிட்டார். நமக்கு தான் புரியவில்லை என்கின்றார்கள் நெட்டிசன்கள்.

Rajini

Categories

Tech |