முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி அவர்களின் பிறந்தநாளை ஒட்டி இன்று தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவருடைய நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் இன்று கொரோனா நிவாரணம் இரண்டாம் தவணை 2000 வழங்கும் திட்டம், அர்ச்சகர்களுக்கு ரூபாய் 4 ஆயிரம் வழங்கும் திட்டம், மளிகை பொருட்கள் வழங்கும் திட்டம் உள்ளிட்ட ஏழு திட்டங்களை தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் கனிமொழி எம்.பி தன்னுடைய தந்தையின் பிறந்த நாளையொட்டி நினைவலைகளை பகிர்ந்து ட்விட் செய்துள்ளார். அதில், “அறை முழுவதும் மகிழ்ச்சியும், நகைச்சுவையும், அறிவும் நிறையச் செய்யும் அப்பாக்களின் நாற்காலிகள் காலியாக இருந்தாலும் அவை நினைவுகளால் நிரம்பி வழிகின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.