Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அப்பாக்கு தெரிஞ்சா திட்டுவாங்க…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு… குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!

தந்தை புளூடூத்து ஹெட் செட் வாங்கித் தராததால் மன உளைச்சலில் இளைஞன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் மெட்ராஸ் சிட்டி பகுதியில் பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 17 வயதான விக்னேஸ்வரன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் ஐடிஐ கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது மகனான விக்னேஸ்வரனுக்கு பிரபாகரன் மொபைல் வாங்கி கொடுத்துள்ளார். இதனையடுத்து  விக்னேஸ்வரன் தந்தை பிரபாகரனிடம் ப்ளூடூத் ஹெட் போன் வாங்கி தருமாறு கேட்டுள்ளான். அதற்கு பிரபாகரன் அப்புறம் வாங்கி தருவதாக கூறியிருக்கிறார்.

இந்நிலையில் விக்னேஸ்வரன் ஆன்லைனில் மூவாயிரத்துக்கு ப்ளூடூத் ஹெட்போன் ஆர்டர் செய்துள்ளார். அதன் பின் தந்தைக்கு தெரிந்தால் திட்டிவிடுவார் என்ற பயத்தில் ஆர்டரை கேன்சல் செய்துள்ளார். இந்நிலையில் திடீரென இரவில் விக்னேஸ்வரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விக்னேஸ்வரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Categories

Tech |