Categories
தேசிய செய்திகள்

அப்பாடா இனி ஒரே ஜாலி தான்…. குஷியில் புதுச்சேரி மக்கள்…. என்ன காரணம் தெரியுமா?….!!!!

உலக நாடுகளில் கடந்த இரண்டு வருடங்களாக கொரானோ பரவலால் பலரும் உயிரிழந்துள்ளனர். இன்று வரை கொரோனா தொற்றால் ஏற்படும் பாதிப்புகளை அரசு மற்றும் மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். அதன்படி இந்தியாவில் நாளொன்றுக்கு சராசரியாக 8000 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகின்றனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 6 நபர்கள்,காரைக்கால் மற்றும் மாஹோவில் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் தற்போது 250 பேருக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதனைத் தொடர்ந்து புதுச்சேரியில் இதுவரை 1,29,093 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் 1,26,968 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் கொரோனா தடுப்பூசி முதல் தவணை 7,76,835 பேர் மற்றும் இரண்டாம் தவணை 4,91,132 பேர் செலுத்திகொண்டுள்ளனர். புதுச்சேரியில் கடந்த வாரங்களில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் புதுச்சேரி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் ஒமிக்ரான் என்ற புதிய வைரசாக உருமாறி நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்த வைரஸ் இந்தியாவில் நுழைந்துள்ளது என்பதால் புதுச்சேரியில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |