Categories
உலக செய்திகள்

அப்பாடா…! இனி வீட்டுப்பாடம் கிடையாது…. மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!!

கொரோனா பரவல் காரணமாக சீனாவில் பள்ளி குழந்தைகளுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள்  நடத்தப்பட்டு வந்தது. இந்த ஆன்லைன் கல்வியால் மாணவர்கள் பெரும் அவதிக்கும், மன அழுத்தத்திற்கும் உள்ளாவதால் பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிகள் திறந்த பிறகு மாணவர்களுக்கு அதிக அளவில் வீட்டுப்பாடங்கள் கொடுக்கப்பட்டது. இதன் காரணமாக மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கு விளையாடுவதற்கு அல்லது வேறு அறிவு சார்ந்த செயல்களில் ஈடுபடுவதற்கு நேரம் கிடைக்கவில்லை.

இதனால் மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கைக்கு இணங்க அந்நாட்டு அரசு புதிய கல்வி சட்டம் சட்டம் ஒன்றை இயற்றியுள்ளது. அதாவது 7 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு எழுத்துத்தேர்வு நடத்த கூடாது என்றும் அந்த தேர்வினை அரசு ரத்து செய்தது  மட்டுமல்லாமல் வீட்டுப் பாடமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |