கிரிமியாவில் நடைபெற்று வரும் ராணுவ பயிற்சியை நிறைவு செய்வதாக ரஷ்யா நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பல ஆண்டுகளாக ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே எல்லை பிரச்சனை நடந்து வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா கைப்பற்றியதால் இரு நாடுகளுக்கும் இடையே மோதல் அதிகரித்து வந்தது. கடந்த ஆண்டு நவம்பர் முதல் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வீரர்களை உக்ரைன் எல்லையில் ரஷ்யா குவித்துள்ளது. இதன் காரணமாக ரஷ்யா, உக்ரைன் மீது எப்போது வேண்டுமானாலும் படையெடுக்கலாம் என்ற அச்சம் இருக்கிறது.
மேலும் உக்ரைனை அமெரிக்க தலைமையிலான நேட்டோ அமைப்பில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, இந்த நடவடிக்கையை ரஷ்யா மேற்கொண்டதாக தகவல் வெளியானது. ஒரு வேளை ரஷியா போர் தொடுத்தால், நாங்கள் உக்ரைனுக்கு ஆதரவு அளிப்பதாக அமெரிக்கா மற்றும் நோட்டோ படைகள் கூறியது. மேலும் அமெரிக்கா மற்றும் நோட்டோ அமைப்பில் இருக்கிற சில நாடுகளும் ஆயுதங்களை உக்ரைனுக்கு அனுப்பி உள்ளது. இதனைத் தொடர்ந்து ரஷ்யா உக்ரைன் எல்லையில் போர் பதற்றம் மேலும் அதிகரித்து வந்தது.
இதனை தடுக்க பல்வேறு நாடுகள் முயற்சித்து வந்தன. அப்போது ரஷ்யா, உக்ரைன் மீது படை எடுக்கும் எண்ணம் இல்லை என்று கூறியது. இருப்பினும் கிரீமியா உள்ளிட்ட உக்ரைன் எல்லையில் ரஷ்யா படைகளை குவித்து போர்ப் பயிற்சியில் ஈடுபட்டது. இந்நிலையில் கிரிமியாவில் ஈடுபட்டு வந்த போர்ப் பயிற்சியை நிறைவு செய்வதாக ரஷ்யா அறிவித்துள்ளது. மேலும் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தி, பல முயற்சிக்குப் பின்னர் ரஷ்யா கிரீமியாவில் நிலை நிறுத்தியுள்ள அனைத்து ராணுவ வீரர்களையு நேற்று முகாமிற்கு திரும்ப அழைத்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. உக்ரைன் எல்லையில் எப்போது வேண்டுமானாலும் போர் நடக்கலாம் என்ற அச்சம் நிலவி வந்த நிலையில், ரஷ்யாவின் இந்த அறிவிப்பு சற்று போர் பதற்றத்தை தணிந்துள்ளது.