நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்த தெலுங்குத் திரைப்படமான ஏ மாயா சேசவா முதலில் வெளிவந்து, மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்படத்தின் தமிழ் பதிப்பான விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படத்திற்காக, சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதை (2010) இவர் பெற்றுக் கொண்டார். இவர் தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து வந்த நிலையில் இருவீட்டாரின் சம்மதத்துடன் இவர்களது திருமணமானது. இதன்பின்னர் இருவரும் கருத்து வேறுபாட்டால் திருமண பந்தத்தில் இருந்து பிரிந்துவிட்டதாக கூட்டாக அறிவித்தனர்.
இந்நிலையில் நடிகை சமந்தா தற்போது காத்துவாக்குல 2 காதல் என்ற படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்துள்ளார். இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் சமந்தாவின் ஆசை நிறைவேறியுள்ளது. 2016ல் வெளியான காதலும் கடந்து போகும் படத்தில் சமந்தா தான் முதலில் நடிக்க வேண்டியிருந்தது .கால்ஷீட் பிரச்சனையால் நடிக்க முடியாமல் போனது. அதன் பின் சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்தபோது அவருடன் சேர்ந்து ஒரு காட்சியில்கூட வராததால் கண்டிப்பாக அவருடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை என்று சமந்தா கூறியிருந்தார்.