நாடு முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடை மூலமாக உணவு தானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது. மத்திய மாநில அரசுகளின் நிதியும் ரேசன் கடைகள் மூலமாக வழங்கப்படுகிறது. இந்த ரேஷன் திட்டம் ஏழை எளிய மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கிறது. அதேநேரம் நல்ல வசதி படைத்தவர்களும் இதன் மூலமாக உதவி பெற்று வருகிறார்கள். ரேஷன் கடையில் குறைந்த விலைக்கு பொருட்களை வாங்கி அவற்றை அதிக விலைக்கு விற்பனை செய்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வண்ணம் இருந்தன.
இதற்கிடையில் தகுதியற்றவர்கள் மே மாதத்தில் தங்களின் ரேஷன் கடை ஒப்படைக்குமாறு உத்தரபிரதேச மாநில அரசு கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகியது. மேலும் ரேஷன் கடை ஒப்படைக்காதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ரேஷன் கார்டை ஒப்படைக்கவும் அல்லது ரத்து செய்யவோ எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று உத்தரப் பிரதேச மாநில அரசு தெளிவுபடுத்தியுள்ளது. அரசின் இந்த உத்தரவையடுத்து இலவச ரேஷன் பொருட்களை பெற்று வந்த மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.