வருமான வரி தாக்கலில் புதிய அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
வருமான வரி செலுத்துவதற்கு நிம்மதி அளிக்கும் வகையில் மத்திய அரசு தற்போது சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் அறிக்கையை தாக்கல் செய்தார். இதில் வருமான வரி செலுத்துவோர் வரி தாக்கல் செய்யும் போது அதில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அதற்கு திருத்திக் கொள்வதற்காக கால அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இதற்காக’updated Return’ இந்த புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
வருமான வரி தாக்கல் செய்த பிறகு அதில் ஏதேனும் தவறுகள் இருந்தால் சம்பந்தப்பட்ட மதிப்பீட்டு ஆண்டின் இறுதியில் ஒரு ஆண்டுக்குள் அப்டேட் செய்து(updated return) கொள்ளலாம் திருத்தப்பட்ட ரிட்டன்(Resived return) மற்றும், தாமத ரிட்டன் (Belated return) காலாவதியான பிறகு அத்துடன் தாக்கல் செய்யப்பட்டால் வரித் தொகையில் 25 % அபராதம் வட்டி வசூலிக்கப்படும். மேலும் மதிப்பீட்டு ஆண்டு முடிந்து ஒரு ஆண்டுக்குள் அப்டேட் ரிட்டன் தாக்கல் செய்யப்பட்டால் 25 % அபராதமும் , வட்டியும் வசூலிக்கப்படும். ஒரு ஆண்டுக்கு பின் இரண்டு ஆண்டுக்குள் தாக்கல் செய்தால் 50% அபராதம் செலுத்த நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.