Categories
தேசிய செய்திகள்

அப்பாடா…! பென்ஷன் வாங்குவோருக்கு நிம்மதி…. மத்திய அரசு சூப்பர் உத்தரவு…!!!

பென்ஷன் வழங்குவதில் தாமதம் இருக்கக்கூடாது என அதிகாரிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Ppo(pention payment order) வழங்குவதில் தாமதம் ஏற்பட்டாலும் பணி ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 மாதங்களுக்கு மேல் பென்ஷன் பணிக்கொடை கிடைப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்போதைய விதிமுறைகளின்படி பிபிஓ வழங்குவதில் தாமதம் ஏற்பட்டாலும் ஆறு மாதங்கள் வரை பென்சன் வழங்கப்படும் இதில் மத்திய பென்ஷன்  மற்றும் பென்ஷனர்  நலத் துறை அண்மையில் வெளியிட்டுள்ள குறிப்பில் 6 மாத முடிவில் உடனடியாக பி.பி.ஓ ஆர்டர் வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் 6 மாதங்களுக்கு மேலும் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு வழக்கமான பென்ஷன் கணக்கு அதிகாரியால் ஒப்புதல் அளிக்காமல் இருக்கக்கூடாது எனவும் பென்ஷன் மற்றும் பென்ஷனர் நலத்துறை வெளியிட்டுள்ள குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இன்னும் சுருக்கமாகச் சொன்னால் எந்த ஒரு சூழலிலும் வழக்கமான பென்ஷன் வழங்குவதில் ஆறு மாதத்திற்கு மேல் தாமதம்  இருக்க கூடாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு நிம்மதி அளிக்கக் கூடிய செய்தியாக உள்ளது. நிர்வாக காரணங்கள் விளைவாக வழக்கமான பென்சன் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால் அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரி பொறுப்பு, எனவும் சம்பந்தப்பட்ட ஓய்வூதியதாரர்கள் வட்டியுடன் சேர்த்து பென்ஷன் தொகை செலுத்தப்பட வேண்டும் எனவும் விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Categories

Tech |