Categories
அரசியல்

அப்பாவுக்கு தப்பாமல் பிறந்த பிள்ளை…. தமிழக முதல்வரை விமர்சித்த சிவி சண்முகம்….!!!!

சொத்து வரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையம் அருகே அ.தி.மு.க கட்சியினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் சொத்து வரி உயர்வு மற்றும் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் ஆகியவற்றை கண்டித்து போராட்டம் நடத்துகின்றனர். இந்த போராட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் தலைமை தாங்கினார். அப்போது சி.வி சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் இந்தியாவில் தனக்குத்தானே முதல்வர் பட்டத்தைச் சூட்டிக் கொண்ட தமிழக முதல்வர் ஸ்டாலினால் பெண்களின் தாலிக்கு தங்கம் என்ற திட்டத்தை ஏன் தொடர முடியவில்லை. இதற்கு நிதி பற்றாக்குறை காரணமாக கூறப்பட்டுள்ளது. ஆனால் அம்மா கொண்டு வந்த திட்டம் என்பதால் தான்  இது ரத்து செய்யப்பட்டுள்ளது என்றார். இந்த ஆட்சியில் தமிழகத்தில் தினந்தோறும் கூட்டு பாலியல் வன்கொடுமை நடந்து வருகிறது.

பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமை நடந்தபோது குரல் எழுப்பிய வைகோ, திருமாவளவன் இப்போது எங்கே போனார்கள். கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்த போது கடந்த 2008-ஆம் ஆண்டு சொத்து வரி உயர்த்தப்பட்டது. இதைத்தொடர்ந்து தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் 150% சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. அப்பாவுக்கு தப்பாமல் பிறந்த பிள்ளை என்பதை ஸ்டாலின் நிரூபித்துள்ளார். ஒரு காலகட்டத்தில் தமிழ்நாட்டு காவலர்கள் ஸ்காட்லாந்து காவல்துறையினர் போல் சிறப்பாக பணியாற்றி வந்தார்கள். ஆனால் இன்று திறமையற்ற முதல்வரால் தமிழக காவலர்கள் சிரிப்பு காவலர்களாக மாறிவிட்டனர் என சி.வி சண்முகம் கூறினார். மேலும் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்ததாக கூறி முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் உள்பட 100-க்கும் மேற்பட்ட நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |