அப்பாவுடன் சென்ற மகன் ரயில் மேல் ஏறி செல்பி எடுத்த போது உடல் கருகி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து கிராமத்தில் வசிப்பவர் மகேஷ்குமார். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு ஜானேஸ்வரன் என்ற ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளார். இந்நிலையில் இவர் தன்னுடைய அப்பாவுடன் இன்று காலை ரயில் நிலையம் அருகே உள்ள அப்பா வேலை பார்க்கும் குடோனுக்கு சென்றுள்ளார். இதையடுத்து மகேஷ்குமார் தன்னுடைய வேலைகளை ஆர்வமாக செய்து கொண்டிருந்தபோது பக்கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் மீது ஏறி ஜானேஸ்வரன் செல்பி எடுத்துள்ளார்.
இதையடுத்து செல்பி எடுத்து விட்டு கீழே இறங்கும் போது எதிர்பாராத விதமாக மேலே சென்று கொண்டிருந்த மின்சார ஒயரை பிடித்ததில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே ஜானேஸ்வரன் பலியாகி உள்ளார். இந்நிலையில் இச்சம்பவம் குறித்து ரயில்வே காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்