தந்தை இறந்த துக்கத்தில் மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரைட் இவரின் மகள் சசியா மதுரையில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் மூன்றாம் ஆண்டு பயின்று வந்த நிலையில் பிப்ரவரி 24ஆம் தேதி சசியா தன் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.இதன் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையில் சசியாவின் தந்தை பிரைட் சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்தது விட்டதால் அந்த வேதனை தாங்க முடியாமல் தற்கொலை செய்திருக்ககூடும் என்று கூறுகின்றனர்.இதன் தொடர்பாக அவனியாபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்