Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“அப்பா இல்லையே” திருமணத்தில் சிலையாய் இருந்த தந்தை…. கண்ணீர் விட்ட மகள்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!!

திருச்சி மாவட்டம் உய்யகொண்டான் திருமலை பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் ஓய்வு பெற்ற அரசு பஸ் நடத்துநர் ஆவார். இவருடைய மனைவி மல்லிகா காவலராக பணியாற்றி வருகிறார். இதையடுத்து எதிர்பாராத விதமாக ராஜேந்திரன் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த வருடம் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் ராஜேந்திரன் மகள் ஜெயலட்சுமிக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. அப்போது தனது திருமணத்தில் அப்பா இல்லையே என்று ஜெயலட்சுமி வருந்தியுள்ளார்.

இதை பார்த்த அவருடைய குடும்பத்தினர் மூன்று லட்சம் ரூபாய் செலவில் ராஜேந்திரனின் மெழுகு சிலை செய்ய பெங்களூரில் ஆர்டர் கொடுத்துள்ளனர். இதையடுத்து திருமணத்தன்று ராஜேந்திரன் தத்ரூபமாக இருப்பது போன்று மெழுகு சிலை வைக்கப்பட்டு சடங்குகள் முடிக்கப்பட்டது. பின்னர் மணமக்கள் பெற்றோர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி கொண்டனர். அப்போது மணமகள் தன்னுடைய தந்தையின் சிலையை பார்த்து கண்ணீர் விட்டு அழுதுள்ளார். இதை பார்த்த அங்கிருந்த உறவினர்கள் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |