11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள டி.என் பாளையம் பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழ் அமுது என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் இருந்த தமிழ் அமுது ஏதோ ஒரு மாத்திரையை சாப்பிட்டுள்ளார். இதுகுறித்து ரவி கேட்ட போது எனக்கு வாழ பிடிக்கவில்லை. அதனால் மாத்திரை சாப்பிட்டு விட்டேன் என தமிழ் அமுது அழுதபடி கூறியுள்ளார். மேலும் பேசி கொண்டிருந்த போதே தமிழ் அமுது வீட்டில் இருந்த மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த ரவி தனது மகளை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி தமிழ் அமுது பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.