Categories
தேசிய செய்திகள்

அப்பா கடவுளே… “இன்னைக்கு நடக்குற போட்டியில இந்தியா ஜெயிக்கணும்”… யாகம் நடத்தி பிராத்தனை செய்த ரசிகர்கள்…!!!

இன்று நடைபெறும் டி20 உலக கோப்பை போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் நேற்று சிறப்பு யாகம் நடத்தி பிரார்த்தனை செய்து வருகின்றனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலக கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் 12 சுற்று தற்போது நடைபெற்று வருகிறது. இந்த சூப்பர் 12 சுற்றில் இன்று அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

டி20 உலக கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் மோதும் இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கிரிக்கெட் ரசிகர்கள் யாகம் நடத்தி பிரார்த்தனை செய்து வருகின்றன. இந்த சம்பவம் தற்போது வைரலாகி வருகின்றது.

Categories

Tech |