நடிகர் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் சென்னையில் உள்ள பனையூர் இல்லத்தில் திடீர் அரசியல் ஆலோசனை நடத்தினார்.
எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் விஜயின் மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறும் என கூறியதை தொடர்ந்து சென்னை அருகே பனையூர் இல்லத்தில் நடிகர் விஜய் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை நடத்தினார். அக்கூட்டத்தில் மாணவரணி, இளைஞரணி, தொண்டரணியினர் மற்றும் மகாராஷ்டிராவை சேர்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளும் ஆலோசனையில் கலந்து கொண்டனர்.
திருச்சி வடக்கு, திருச்சி தெற்கு, மதுரை வடக்கு, மதுரை தெற்கு நிர்வாகிகள் மற்றும் பல்வேறு மாவட்ட நிர்வாகிகழும் கலந்து கொண்ட அக்கூட்டத்தில் விஜய் தனது மக்கள் இயக்கத்தை வலுப்படுத்துவது சம்மந்தமான விஷயங்கள் குறித்து ஆலோசித்ததாக தகவல் வெளியாகி உள்ளது . இன்னும் சில நாட்களில் கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு உள்ளிட்ட பிற மாவட்ட நிர்வாகிகளையும் நடிகர் விஜய் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார் என கூறப்படுகின்றது .