தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதியினர் பிரிய போவதாக அறிவித்துள்ளதால் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இந்த நிலையில் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா சில விஷயங்களை கூறியுள்ளார். அதாவது பிரபல நடிகரான ரஜினிகாந்துக்கு இந்தியா மட்டுமில்லாமல் வெளிநாடுகளிலும் எக்கசக்கமான ரசிகர்கள் உள்ளனர்.
தமிழ் மட்டுமே படிக்க தெரிந்த ரஜினிகாந்த் தனது மகள் சௌந்தர்யாவுக்கு தமிழில் டுவிட் போடுவதற்காக ஒரு முறை வாய்ஸ் மெசேஜ் ஒன்றை அனுப்பி இருந்தார். அதனை கேட்ட சௌந்தர்யா இப்படிப்பட்ட பிரபலங்களின் குரல் மக்களுக்கு நேரடியாக சென்றடைய வேண்டும் என்பதற்காக “ஹூட்” என்ற ஆப்பை உருவாக்கியுள்ளதாக கூறியுள்ளார்.
அதன் மூலம் நடிகர் ரஜினிகாந்த் தற்போது தனது வாய்ஸ் நோட்டை அடிக்கடி வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்துடன் “அண்ணாத்த” படம் ப்ரிவியூ பார்த்தது மற்றும் அந்த படத்தின் 50-வது நாள் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து வாய்ஸ் நோட்டை பகிர்ந்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.