இன்றைய காலகட்டத்தில் மக்கள் ஆடம்பர வாழ்க்கையை வாழ ஆசைப்படுகின்றனர். இதனால் எத்தனை பேர் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள் என்று கேள்வி எழுப்பினால் விடை தேட வேண்டிய வரும். ஆடம்பரப் பொருளாக இருந்த பொருட்கள் கூட இப்போது அத்தியாவசிய பொருளாக மாறிவிட்டது. ஆனால் வசதி குறைந்த ஏழை மக்கள் தங்களுக்கு தேவையாக இருக்கும் அத்தியாவசிய பொருளைக்கூட ஆடம்பரப் பொருளாக பார்க்கிறார்கள். அதை உயர்வாகவும் பார்க்கிறார்கள்.
அந்த வகையில் தந்தை ஒருவர் பழைய சைக்கிள் ஒன்றை விலை கொடுத்து வாங்கி தனது வீட்டுக்குக் கொண்டு வருகிற அதைப் பார்த்த அவருடைய மகன் சந்தோஷத்தில் உச்சிக்கே சென்று துள்ளி குதிக்கிறார். சிறுவனுடைய தந்தை அந்த சைக்கிளை வெளியே எடுத்து செல்வதற்கு முன்பாக அதற்கு பூமாலை போட்டு வழங்குகிறார். இதைப் பார்த்த சந்தோஷத்தில் துள்ளிக் குதித்த மகனும் பின்னர் அமைதியாகி சாமி கும்பிட்டு விட்டு கொள்கிறார். தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் பல விதமாக தங்களுடைய கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். அந்தவகையில் ஒருவர் சிறுவனின் மகிழ்ச்சியான உணர்வு விவரிக்க முடியாதது. உண்மையில் இந்த பூமியில் மிக வசதியான நபர் அந்த சிறுவன் தான். இலட்சக்கணக்கானவர்கள் சூழ்ச்சியான இந்த உலகில் தங்கள் வாழ்க்கையை நடத்தி செல்லவே முயற்சி செய்து கொண்டிருக்கும் இந்த சூழலில் தன்னுடைய வாழ்க்கையை சிறுவன் சந்தோசமாக கொண்டு செல்கிறான் என்று தெரிவித்துள்ளார்.
It’s just a second-hand bicycle. Look at the joy on their faces. Their expression says, they have bought a New Mercedes Benz.❤️ pic.twitter.com/e6PUVjLLZW
— Awanish Sharan 🇮🇳 (@AwanishSharan) May 21, 2022