Categories
மாநில செய்திகள்

அப்புறம் இழுத்து மூட வேண்டி வரும்… டாஸ்மாக் கடைகளுக்கு…. ஐகோர்ட் அதிரடி வார்னிங்…!!!!

மலைவாசஸ்தலங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை  ஒன்றை விடுத்துள்ளது.

வன பகுதிகளில் பிளாஸ்டிக் பொருள்கள் மற்றும் மதுபாட்டில்கள் குவிந்து கிடப்பது தொடர்பாக இணையத்தில் காணொலிக் காட்சி வெளியானது . இதன் அடிப்படையில் பதியப்பட்ட வழக்கானது உயர்நீதிமன்ற நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு  முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மலைப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை வாங்குவோர், மது அருந்திய பின், அந்த காலி கண்ணாடி பாட்டில்களை வனப்பகுதிகளில் வீசிச் செல்கின்றனர். எனவே  அந்த காலி கண்ணாடி பாட்டில்களை விலங்குகள் மிதிக்கும்போது காயமடைவதாகவும், மேலும் இதன் விளைவால் அடுத்த 3 மாதங்களில் அவை இறந்து விடுகின்றன என்றும் நீதிபதிகள் தரப்பில் வேதனை தெரிவித்தனர்.

ஆகவே இந்த கண்ணாடி பாட்டில்களை திரும்பப் பெறுவது தொடர்பாக வருகிற 25 ஆம் தேதிக்குள் மாற்று திட்டம் ஒன்று வகுக்கும்படி, டாஸ்மாக் நிர்வாகத்துக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். இந்நிலையில் இதை தவறினால், மலைப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட நேரிடும் எனவும் எச்சரித்துள்ளனர். மேலும் இந்த விசாரணையை  வரும் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

Categories

Tech |