விசிக கட்சியின் தலைவர் திருமாவளவனின் 60வது பிறந்த நாளையொட்டி மணிவிழா நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. இந்த மணிவிழாவில் பேசிய ஸ்டாலின், 30 வருடங்களுக்கு முன்பு நானும் திருமாவும் நெருக்கமாகஇருந்திருந்தால் அவருக்கு நானே பெண் பார்த்து திருமணம் செய்து வைத்திருப்பேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருமாவின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், கலைஞர் பலமுறை திருமாவிடம் திருமணம் செய்ய சொன்னார். கலைஞர் சொல்லி திருமா செய்யாதது திருமணம் மட்டும்தான். ஆனால், திருமாவளவன் விடுதலை சிறுத்தைகள் கட்சியையே திருமணம் செய்துகொண்டார் கட்சி தொண்டர்கள்தான் அவருக்கு பிள்ளைகள் என திருமாவுக்கு திருமணம் செய்வது குறித்த தனது விருப்பத்தை ஸ்டாலின் வெளிப்படுத்தினார்.