Categories
சினிமா

“அப்போ அண்ணன் இப்போ தம்பி…!!” தனுஷ் விவாகரத்து குறித்து நெட்டிசன்கள் கருத்து….!!

நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்தது குறித்து தொடர்ந்து பல விவாதங்கள் இணையதள வாசிகளால் கூறப்பட்டு வருகின்றன.

நடிகர் தனுஷ் காதலித்து திருமணம் செய்துகொண்ட தன்னுடைய மனைவியான ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்துள்ளார். இதுகுறித்து பல்வேறு சர்ச்சையான கருத்துகள் பேசப்பட்டு வருகின்றன. மேலும் தனுஷின் குடும்பத்திற்கு விவாகரத்து என்பது ஒரு புதிய விஷயம் அல்ல ஏற்கனவே தனுஷின் அண்ணன் செல்வராகவன் தன்னுடைய காதல் மனைவியான சோனியா அகர்வால் விவாகரத்து செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் செல்வராகவன் காதல் கொண்டேன் படத்தின் மூலம் சினிமா உலகுக்கு அறிமுகமானார்.

அவர் இயக்கிய 7ஜி ரெயின்போ காலனி படத்தில் ஹீரோயினாக நடித்த சோனியா அகர்வாலை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பின்னர் அவர்களது திருமண வாழ்க்கை மூன்று வருடங்களில் விவாகரத்துக்கு தள்ளப்பட்டது. பின்னர் செல்வராகவன் தன்னிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்து தற்போது அவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளது. மேலும் இப்போது தனுஷ் தனது அண்ணன் பாணியில் தானும் விவாகரத்து முடிவை எடுத்துள்ளார். நடிகர் தனுசுக்கு திருமணமாகி 18 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது இவருடைய திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |