Categories
மாநில செய்திகள்

அப்போ அப்படி சொல்லிட்டு…..  இப்போ இப்படி பண்ணுறீங்களே….. புலம்பவிட்ட தமிழக அரசு…. முணுமுணுப்பில் மக்கள்…!!

சொன்னதை செய்வோம், செய்வதை தான் சொல்வோம் என்று தேர்தல் பிரச்சாரத்தில் அதிரடியான வாக்குறுதிகளை அள்ளி வீசி வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது திராவிட முன்னேற்றக் கழகம். அதன் தலைவர் மு.க ஸ்டாலின் தமிழக முதல்வராக பொறுப்பேற்று பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம், பால் விலை குறைப்பு, பெட்ரோல் விலை குறைப்பு, கொரோனா நிவாரணம் என முதல்வராக பொறுப்பேற்ற்று அதிரடியாக கையெழுத்திட்டு அசத்தினார்.

திமுக வெற்றிபெற காரணமாக இருந்த தேர்தல் அறிக்கை, திமுக மீதுள்ள நம்பிக்கையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நகை கடன் தள்ளுபடி குறித்து தமிழக அரசு விரைவில் அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் தற்போது அதிர்ச்சி அளிக்கும் வகையில் தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் அரசு வெளியிட்ட கணக்கின்படி, தமிழகம் முழுவதும் 48 லட்சத்து 84 ஆயிரத்து 776 பேர் நகைக்கடன் பெற்றுள்ள நிலையில் 35 லட்சத்து 37 ஆயிரத்து 697 பேருக்கு நகை கடன் கிடையாது என்று அரசு அறிவித்துள்ளது மக்களை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |