Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“அப்போ இது தங்கம் இல்லையா…?” மூதாட்டிக்கு நடந்த கொடூரம்…. சென்னையில் பரபரப்பு சம்பவம்….!!

நகைகளுக்கு ஆசைப்பட்டு மூதாட்டியை கொலை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை மாவட்டத்திலுள்ள அயப்பாக்கம் சாலை அண்ணாநகரில் சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிர்மலா என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை மர்ம நபர்கள் கொலை செய்து நகை மற்றும் செல்போன் போன்றவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்கள் தீவிரமாக தேடி வந்துள்ளனர். இந்நிலையில் அம்பத்தூர் ரயில் நிலையம் அருகில் பதுங்கியிருந்த ஒரு நபரை காவல்துறையினர் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தியதில் அந்த நபர் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பைராம் டிடு என்பது தெரியவந்துள்ளது.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சென்னை வந்த பைராம் மூதாட்டி வீட்டில் தனியாக இருந்த சமயத்தில் உள்ளே புகுந்து நகையை பறிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது நகையை பறிக்க விடாமல் மூதாட்டி தடுத்ததால் கோபமடைந்த பைராம் நிர்மலாவை கொன்று நகை மற்றும் செல்போனை கொள்ளையடித்து சென்றது தெரியவந்துள்ளது. மேலும் தங்கம் என நினைத்து கொள்ளையடித்து சென்ற நகைகள் கவரிங் என்பது விசாரணையில் தெரிந்தது. இந்த சம்பவம் நடந்த 17 மணி நேரத்தில் மூதாட்டியின் செல்போன் சிக்னலை வைத்து குற்றவாளியை பிடித்த இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரை ஆவடி மாநகர கமிஷனர் சந்தீப் ராய் பாராட்டியுள்ளார்.

Categories

Tech |