நெல்லையில் முகக் கவசம் அணியாத நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது மீண்டும் கொரோனா படையெடுக்க ஆரம்பித்திருக்கிறது. இதனை தடுக்க அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் தொற்றின் பரவலை தடுக்கும் பொருட்டு சில கட்டுப்பாடுகளையும், பல விதமான நடவடிக்கைகளையும் அமலுக்குக் கொண்டு வந்தது.
இதற்கிடையே பொதுமக்கள் தொற்றின் பரவலை தடுக்கும் பொருட்டு முக கவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் வலியுறுத்தியது. இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் காவல்துறையினர் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு முக கவசம் அணியாத 30 நபர்களுக்கு ரூபாய் 200 வீதம் அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டுள்ளது.