அதிமுகவில் இரண்டு அணிகளாக பிரிந்ததிலிருந்து உச்சகட்ட குழப்பம் தொடர்ந்து கொண்டே வருகிறது. பொதுக்குழுவை கூட்டி அதிமுகவின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட போதிலும் கட்சியின் முழு கட்டுப்பாடும் அவர் வசம் இன்னும் வரவில்லை. இந்த நிலையில் நீதிமன்ற படிகள் ஏறும் சூழ்நிலையை இருந்து வருகிறது அதிமுக பொது குழுவில் எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கின்ற நிலையில் அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருக்கின்றார் ஓபிஎஸ் அதிமுக அலுவலக சாவியும் தற்போது எடப்பாடி வசம் உள்ளது.
இந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையத்திடம் தன்னை பொதுச் செயலாளராக அங்கீகரிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் மனு அளிக்கப்பட்டிருக்கிறது. இது பற்றி மனு அங்கு பரிசிலனையில் இருக்கிறது அதேசமயம் ஓபிஎஸ் தரப்பிலும் மனு கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் முடிவும் ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் உச்சநீதிமன்ற என்ன தீர்ப்பு வழங்கப்படுகிறது என்பதை பொறுத்தே தான் அதிமுகவின் எதிர்காலம் யார் என்பது முடிவு செய்யப்படுகிறது. இரண்டு அணிகளும் தங்களின் டெல்லி லாவியை தீவிரமாக முயற்சி செய்து வருகின்றார்கள் ஆனால் டெல்லி மேலிடம் இருவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என விரும்புவதாக கூறப்படுகின்றது.
இதற்கு ஓபிஎஸ் தயாராக இருக்கும்போது எடப்பாடி அணி தயாராக இல்லை என்ற காரணத்தினால் டெல்லி மேலிடம் தற்போதைக்கு இந்த விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்காமல் அமைதியாக உள்ளது. மேலும் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் போது அதிமுக விவகாரத்தை பார்த்துக் கொள்ளலாம் என இருப்பதாகவும் கூறப்படுகிறது. டெல்லி லாபி இப்படி இருப்பதும் கூட ஓபிஎஸ் க்கு சாதகமானதாகவும் ஓபிஎஸ் பழனிசாமிக்கு பின்னடைவாகவும் பார்க்கப்படுகிறது இது ஒரு புறம் இருக்க மற்றொரு புறம் எடப்பாடி பழனிசாமிக்கு மற்றொரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதாவது எடப்பாடி பழனிசாமி அணியில் இருந்த மைத்ரேயன் திடீரென ஓபிஎஸ் அணிக்கு மாறியிருக்கின்றார்.
தர்மயுத்தம் தொடங்கிய போது ஓபிஎஸ் ஆதரவளித்தவர் எடப்பாடி பழனிசாமி அதிமுக பொது செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்ட பின் அவரை சந்தித்து திடீரென தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளார். ஆனால் அங்கு அவருக்கு உரிய மரியாதையும் முக்கியத்துவமும் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது இதனால் ஓபிஎஸ் அணிக்கே திரும்பி இருக்கும் அவர் ஓபிஎஸ் தான் ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு என அதிரடியாக கூறியுள்ளார். அது மட்டும் இல்லாமல் தனக்கு புத்தி பேதலித்து போய் எடப்பாடிக்கு ஆதரவளித்து விட்டதாக கூறியுள்ளார். தற்போது மீண்டும் ஓபிஎஸ் துணையாக இருப்பேன் எனக்கு உடல்நிலை சரியில்லாத போது என்ன அழைத்து நலம் விசாரித்தவர் ஓபிஎஸ் என மனம் நெகிழ்ந்து போய் பாராட்டு பத்திரம் வாசத்திருக்கிறார்.