கடந்த 1774 ஆம் ஆண்டு தென் பசிபிக் பகுதியிலிருந்த சாண்டி தீவு சில நாட்கள் கழித்து காணாமல் போன நிலையில் அது மிதக்கும் படிக கற்களான கடல் பியூமிஷாக இருந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
நியூ கலிடோனியாவிற்கு அருகே கடந்த 1774 ஆம் ஆண்டு தீவு ஒன்று இருந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த சாண்டி தீவை கேப்டன் ஜேம்ஸ் குக் ஆஸ்திரேலியாவின் கிழக்குப் பவள கடலின் வரைபடத்தில் சேர்த்துள்ளார். இந்நிலையில் 5 கிலோ மீட்டர் அகலமும், 24 கிலோமீட்டர் நீளமும் இருந்ததாக நம்பப்பட்ட இந்த சாண்டி தீவு ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து வரை படங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் அந்தத் தீவு சில நாட்களில் காணாமல் போயுள்ளது. இதுகுறித்து விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளார்கள். அதாவது அந்த தீவு கடலுக்கடியில் எரிமலை வெடிப்பினால் உருவான மிதக்கும் படிக கற்களான கடல் பியூமிஸாக இருந்திருக்கலாம் என்று கூறியுள்ளார்கள்.