திருப்பூரில் பாஜக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், நான் கட்டியுள்ள ரஃபேல் வாட்ச்சுக்கான ரசீதை வெளியிட திமுகவினர் வலியுறுத்தி வருகின்றனர். அன்று எம்ஜிஆர் ஐ வாட்ச் ஐ வைத்து விமர்சித்தனர்.
இன்று என்னை விமர்சிக்கிறார்கள். இந்த வாட்ச் ஐ வைத்தே திமுகவின் 2.5 லட்சம் கோடி ஊழலை வெளிக்கொண்டு வருவேன் என்று பேசினார். தொடர்ந்து, உதயநிதிக்கு பின் இன்பநிதி வந்தாலும் வாழ்க என்போம் என கூற வெட்கமாக இல்லையா. தன்மானம் இல்லையா என கடுமையாக விமர்சித்தார்.