Categories
அரசியல்

“அப்போ ஒரு பேச்சு…. இப்போ ஒரு பேச்சு!”…. திமுகவை சாடிய ஓபிஎஸ்….!!!!

தமிழகத்தில் தேர்தல் சமயத்தில் ‘பூரண மதுவிலக்கு’ என்ற வாக்குறுதி தவறாமல் இடம்பெறும். இருப்பினும் கடந்த அதிமுக ஆட்சியில் கூட பூரண மதுவிலக்கு வெறும் பேச்சாக மட்டுமே இருந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த வருடம் நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த திமுக படிப்படியாக பூரண மதுவிலக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று வாக்குறுதியில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மதுவிலக்கிற்காக இதுவரை திமுக அரசு ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

அதாவது ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது மதுக்கடைகளை மூட வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால் தற்போது பார்கள் மூடப்பட வேண்டும் என்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார். மது விலக்கு கொள்கையில் இரட்டை வேடம் போடும் திமுக அரசிற்கு எனது கண்டனம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |