Categories
சினிமா

அப்போ காதல் கன்ஃபார்ம் தான் போல…. காதலியுடன் ஒன்றாக சென்ற கெளதம் கார்த்திக்…..!!!!

தமிழ் சினிமாவின் நவரச நாயகன் கார்த்திக் மகன் கெளதம் கார்த்திக் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். அவர் தற்போது சிம்புவுடன் இணைந்த பத்து தலை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கு முன்னதாக தேவராட்டம் திரைப்படத்தில் நடிகர் மஞ்சுமா மோகனுடன் இணைந்து நடித்திருந்த நிலையில் அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அந்த திரைப்படத்திற்கு பிறகு நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சுமா மோகன் இருவரும் காதலித்து வருவதாக பேசப்பட்டது. ஆனால் அவர்கள் இருவருமே இதைப் பற்றி எதுவும் வாய் திறக்கவில்லை. இந்நிலையில் கௌதம் கார்த்திக் தனது நெருங்கிய நண்பரான கோபியின் நிச்சயதார்த்த விழாவிற்கு மஞ்சுமா மோகனுடன் சென்றுள்ளார். அவர்கள் இருவரும் ஒன்றாக மணமக்களை வாழ்த்தி உள்ளனர். இதன் மூலம் அவர்களின் காதல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Categories

Tech |