Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அப்போ நீங்க டாக்டர் இல்லையா….? வசமாக சிக்கிய வாலிபர்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்த போலி மருத்துவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள திப்பசந்திரத்தில் உள்ள மருந்து கடையில் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் ஞான மீனாட்சி, ஓசூர் சரக மருந்து கட்டுப்பாட்டு ஆய்வாளர் முருகன் மற்றும் காவல்துறையினர் அடங்கிய குழுவினர் திடீரென ஆய்வு செய்துள்ளனர். அப்போது தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த விஜய் என்பவர் மருந்து கடைக்கு பின்புறம் கிளினிக் வைத்து நடத்தியது தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து விஜய்யிடம் நடத்திய விசாரணையில் அவர் எலட்ரோபதி படித்துவிட்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தது தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் விஜய்யை கைது செய்ததோடு, அந்த கிளினிக்கை பூட்டி சீல் வைத்துள்ளனர்.

Categories

Tech |