Categories
உலக செய்திகள்

அப்போ பிரேக் அப் தான்…. இளவரசர் ஹாரியை மேகன் மிரட்டினாரா?… என்ன நடந்தது?….

இளவரசர் ஹரி மேகனை திருமணம் செய்யும் முன் சில பெண்களை காதலித்த விடயம் பிரித்தானியா அறிந்ததுதான்.

சோகமான விடயம் என்னவென்றால், இருவருமே ஹரியைக் கழற்றிவிட்டுவிட்டார்களாம். பிறகு தான் ஹரி மேகனை சந்தித்துள்ளார். அல்லது, மேகன் ஹரியை சந்தித்தார் என்றும் சொல்லலாம். இப்படியிருக்கும் நிலையில், திடீரென ஒருநாள் மேகன் ஹரியுடன் பிரேக் செய்துவிடுவேன் என மிரட்டினாராம். ஏற்கனவே காதலிகள் பிரேக் அப் செய்துவிட்டதால் மனமுடைந்திருந்த ஹரி, மேகனும் பிரேக் அப் செய்துவிடுவதாகக் கூறியதைக் கேட்டு ஆடிப்போனாராம். விடயம் என்னவென்றால், ஹரியும் மேகனும் காதலிக்கத் துவங்கியதும், அவருக்கு ஊடகங்களால் தொந்தரவு ஏற்படக்கூடாது என்பதற்காக தங்கள் காதலை இரகசியமாக வைத்திருக்கின்றார் ஹரி.

ஆனால் மேகனோ, ஹரியுடனான தனது உறவை அதிகாரப்பூர்வமாக்கிக்கொள்ள முடிவு செய்திருக்கின்றார். தன்னை காதலிப்பதை ஹரி அதிகாரப்பூர்வமாக அறிவிக்காவிட்டால், அவரை பிரிந்துவிடுவதாக மேகன் மிரட்ட, நடுங்கிப்போன ஹரி, உடனே கென்சிங்க்டன் மாளிகை தகவல் தொடர்புச் செயலாளர் Jason Knaufஐ தொலைபேசியில் அழைத்து, மேகன் தன் காதலி என்பதைத் தெரிவிக்கும் ஒரு அறிவிப்பை வெளியிடும்படி வற்புறுத்தியுள்ளார்.  இந்த தகவல்கள் எல்லாம், Valentine Low என்பவர் எழுதியுள்ள Courtiers: The Hidden Power Behind the Crown என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

Categories

Tech |