Categories
சினிமா தமிழ் சினிமா

அப்ப கண்ணு கூசல…. இப்ப கூசுதா….? மூத்த இயக்குனரிடம் 2ஆம் குத்து இயக்குனர் காட்டமான கேள்வி…!!

மூத்த இயக்குனரான பாரதிராஜாவின் விமர்சனத்திற்கு இரண்டாம் குத்து படத்தின் இயக்குனர் பதிலடி கொடுத்துள்ளார். 

ஹர ஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து உள்ளிட்ட அடல்ட் பகுதிகள்  அடக்கிய படங்களை மட்டுமே இயக்கி வரும் பிரபல இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் தற்போது இருட்டுஅறையில்முரட்டுகுத்து படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். இதற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதுகுறித்து மூத்த இயக்குனர் பாரதிராஜா தமிழ் சினிமாவிற்கு களங்கம் விளைவிப்பது போல் உள்ளது என்பது உள்ளிட்ட விமர்சனங்களை படம் குறித்து முன்வைத்தார்.

இந்நிலையில் இரண்டாம் குத்து படத்தின் இயக்குனர் சந்தோஷ் பி ஜெயக்குமார் மூத்த இயக்குனர் பாரதிராஜாவின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார். அதில், மிக்க மரியாதையுடன் கேள்வி கேட்பதாக குறிப்பிட்ட சந்தோஷ், 1981 இல் வெளிவந்த டிக் டிக் டிக் படத்தை பார்த்து கூசாத கண்ணு இப்ப கூசிருச்சா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இவரது இந்த கருத்து  முகச்சுளிப்பை ஏற்படுத்துவது போல் உள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

Categories

Tech |