Categories
கிரிக்கெட் விளையாட்டு

அப்ப கே.எல் ராகுலை நீக்க சொல்றீங்களா….? சூரியகுமாரின் அதிரடி பதில்…. வாயடைத்துப் போன பத்திரிக்கையாளர்….!!!!

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று ஹாங்காங் மற்றும் இந்திய அணிகள் மோதியது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்த மேட்சில் சூரியகுமார் யாதவ் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் 26 பந்துகளில் 6 பவுண்டரிகள், 6 சிக்ஸர் உடன் 68 ரன்கள் எடுத்திருந்தார். இந்நிலையில் தொடக்க வீரர் கே.எஸ் ராகுல் வழக்கத்தை விட மிகவும் மெதுவான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். இவர் நேற்று நடைபெற்ற மேட்ச்சில் 39 பந்துகளில் 36 ரன்கள் எடுத்தார். இதனால் கே.எல் ராகுல் மீது பல்வேறு விமர்சனங்கள் வருகிறது.

இந்நிலையில் சூரியகுமார் யாதவ் போட்டி முடிவடைந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது செய்தியாளர் ஒருவ‌ர் டி20 உலக கோப்பை தொடங்குவதற்கு முன்பாக சோதனை பயிற்சியின் போது நீங்கள் கேப்டன் ரோஹித் சர்மா உடன் துவக்க வீரராக களம் இறங்குவீர்களா என்று கேட்டார். அதற்கு சூரியகுமார் யாதவ் கே.எல் ராகுலை நீக்க வேண்டும் என்று நீங்கள் கூறுகிறீர்களா என்றார். அதன்பின் கே.எஸ் ராகுல் தற்போது காயத்திலிருந்து மீண்டும் விளையாட வந்திருக்கிறார்.

அவருக்கு சிறிது கால அவகாசம் தேவை. என்னுடைய அணியின் தேவைக்கு ஏற்ப நான் பேட்டிங் ஆடுவேன். நான் எந்த இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டும் என்பதை என்னுடைய அணியின் கேப்டன் மட்டும் பயிற்சியாளர் கூறுவார்கள். மேலும் நாங்கள் நிறைய திட்டங்களை வகுத்து வைத்துள்ளோம். அதை பயிற்சியில் நடைமுறைப்படுத்துவதை விட போட்டியில் நடைமுறைப்படுத்தினால் நன்றாக இருக்கும் என்று கருதுகிறோம் என்றார்.

Categories

Tech |