Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

அப்ப புரியல… இப்ப தான் புரியுது… ரசிகர்கள் கவலை…!!!

தனுஷ் சில நாட்களுக்கு முன்பு வெளியிட்ட புகைப்படத்திற்கான அர்த்தம் தற்பொழுது தான் புரிகிறது என ரசிகர்கள் கூறுகின்றனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் ஐஸ்வர்யா கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி இருவரும் பிரிவதாக அறிவித்தனர். இச்செய்தியை அறிந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். இவர்களை சேர்த்து வைப்பதற்காக நண்பர்கள், குடும்பத்தினர் முயற்சித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் அவரவர்களின் பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

https://www.instagram.com/p/CJDmFc-Bpyk/?utm_source=ig_web_button_share_sheet

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு தனுஷ் தாஜ்மஹாலுக்கு முன் அமர்ந்து தன் பக்கத்தில் யாரோ அமர்ந்திருப்பது போல் கை போட்டவாறு எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டால் பதிவிட்டிருந்தார். இப்புகைப்படமானது தற்போது அனைவராலும் பேசப்பட்டு வருகின்றது. ரசிகர்கள் நீங்கள் அப்போது வெளியிட்ட புகைப்படத்திற்கான அர்த்தம் எங்களுக்கு இப்போதுதான் புரிகிறது என கூறி வருகின்றனர். அத்ரங்கி ரே திரைப்படத்திற்காக நீங்கள் காத்திருந்தது தெரியாமல் போனதே என ரசிகர்கள் கூறுகின்றனர். மீண்டும் ஐஸ்வர்யாவுடன் இணைந்து வாழுங்கள் என கூறி வருகின்றனர்.

Categories

Tech |