அமமுக தலைமையில் புதிய கூட்டணி அமைக்கப்படும் என்று டிடிவி தினகரன் அதிரடியாக தற்போது அறிவித்துள்ளார்.
அமமுக தலைமையை ஏற்று அதிமுக பாஜகவுடன் கூட்டணியில் இணைய தயார் என்று டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். இன்று காலை சென்னை டி நகர் இல்லத்தில் சசிகலாவுடன் அமமுக செயலாளர் டி டி வி தினகரன் ஆலோசனை நடத்தினார். அதை தொடர்ந்து பேசிய டிடிவி தினகரன் கூட்டணி பற்றிய சில கட்சிகளுடன் பேசி வருகிறோம்.
கூட்டணி முடிவானது விரைவில் அறிவிக்கப்படும் எங்களின் ஒரே இலக்கு திமுகவை ஆட்சிக்கு வர விடக்கூடாது என்பதுதான். மேலும் அதிமுகவே வந்தாலும், பாஜக வந்தாலும் அமமுக தலைமையில்தான் கூட்டணி என்றும் தெரிவித்தார்.