அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொருளாளர் வெற்றிவேலுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அமமுக மாவட்ட நிர்வாகிகளுடன் பொருளாளர் வெற்றிவேல் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த நிலையில் பொருளாளர் வெற்றிவேலுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா உறுதிசெய்யப்பட்ட வெற்றி வேல் தற்போது சென்னையில் இருக்கின்ற தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.