Categories
அரசியல்

அமமுக பொருளாளர் வெற்றிவேல்… உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்… மருத்துவ அறிக்கை…!!!

அமமுக கட்சியின் பொருளாளர் வெற்றிவேல் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தகவல் அறிவித்துள்ளது.

அமமுக கட்சியின் பொருளாளரான வெற்றிவேலுக்கு கடந்த ஆறாம் தேதி கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. அதனால் சென்னை போரூரில் இருக்கின்ற தனியார் மருத்துவமனை ஒன்றில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அவருக்கு நேற்று திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது.

இது பற்றி மருத்துவர்கள் கூறுகையில், “வெற்றிவேல் கடந்த வாரம் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அதனால் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அதனால் அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டிருக்கிறது. இருந்தாலும் வெற்றி வேலுடன் நிலை தொடர்ந்து  கவலைக்கிடமாக உள்ளது”என்று தெரிவித்துள்ளனர்.

 

Categories

Tech |