மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக அமராவதி அணை ஒரே நாளில் 5 அடி நீர்மட்டம் உயர்ந்ததால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி மலையில் நேற்று பெய்த கனமழை காரணமாக திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணை ஒரே நாளில் 5 அடி நீர்மட்டம் உயர்ந்ததால் பொதுமக்கள் – விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் . 90 அடி கொள்ளளவு கொண்ட அமராவதியின் நீர் மட்டம் கடந்த வார நிலவரப்படி 30 அடியாக இருந்தது.
இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கனமழை காரணமாக இன்று காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 48.07 அடியாக உயர்ந்துள்ளது. மேலும் வினாடிக்கு 2,272 கனஅடி நீர் அணைக்கு வந்துகொண்டிருக்கிறது. கேரள மாநிலம் மூணார் , மறையூர், சின்னார் போன்ற பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்வதால் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் நிலை உள்ளது.