Categories
தேசிய செய்திகள்

அமர்நாத்தில் மேகவெடிப்பில் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு….. மோடி இரங்கல்….!!!!

அமர்நாத்தில் மேக வெடிப்பு காரணமாக வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆக அதிகரித்துள்ளது.

அமர்நாத் புனித யாத்திரை நடந்து வரும் சூழலில் பக்தர்கள் செல்லும் குகை அருகே உள்ள பகுதியில் இன்று திடீரென மேக வெடிப்பு ஏற்பட்டு பெருமழை கொட்டியது. இந்த வெடிப்பால் ஏற்பட்ட வெள்ளத்தில் இதுவரை சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. இதில் பலர் மாயமாகியுள்ளனர். சம்பவத்தில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் .

மீட்பு பணி நடைபெற்று வரும் நிலையில் அமர்நாத் யாத்திரை தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த யாத்திரையின் போது மேக வெடிப்பு ஏற்பட்டு உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் படி பிரதமர் கூறியுள்ளார் .

Categories

Tech |