கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் மருத்துவமனையில் அமர்ந்தபடியே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் ஜகல்பூரி நகரத்தில் வசிக்கும் 57 வயதான நபர் பிஸ்வபங்கலா கிரிரங்கனில் உள்ள ஒரு மருத்துவமனையில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனாவால் தீவிரமாக பாதிக்கப்பட்ட இவருக்கு ஆக்சிஜன் உதவி கொடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்ட பிறகு நோயாளியின் உறவினர்கள் வீட்டிற்கு சென்றுள்ளனர்.இதனையடுத்து புதன்கிழமை காலை நோயாளியை பார்க்க அவரது உறவினர் மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.
அப்போது அவர் எவ்வித அசைவும் இல்லாமல் படுக்கையில் அமர்ந்திருந்ததை பார்த்த உறவினர்கள் அதிர்ச்சியடைந்து மருத்துவரை அழைத்துள்ளார். இதனைத்தொடர்ந்து அங்கு வந்த மருத்துவர் நோயாளியை பரிசோதத்தில் அவர் இறந்துவிட்டதாக கூறியுள்ளார். இதற்கு மருத்துவமனையில் அலட்சியம் தான் காரணம் என்று அவரது குடும்பத்தார் கூறியுள்ளனர்.மேலும் மருத்துவமனை நிர்வாகம் எந்த பதிலும் அளிக்காத நிலையில் அவர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவர்களை சமாதானப்படுத்தி போராட்டத்தை கலைத்துள்ளனர்.