அமலாக்கத்துறை இயக்குநா் சஞ்சய்குமாா் மிஸ்ராவின் பதவிக் காலத்தை புதியதாக ஓராண்டுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவையின் நியமனங்களுக்கான குழு ஒப்புதல் வழங்கி இருப்பதாக மத்திய பணியாளா் அமைச்சகம் தெரிவித்தது. சஞ்சய்குமாா் மிஸ்ரா(62) சென்ற 2018-ம் வருடம் நவம்பா் 19ம் தேதி, இரண்டு வருடங்களுக்கு என அமலாக்கத்துறையின் இயக்குநராக மத்திய அரசால் நியமிக்கப்பட்டாா். இதையடுத்து சென்ற 2020ம் வருடம் நவம்பா் 13ம் தேதி மத்திய அரசு வெளியிட்ட உத்தரவில், முன்பு வெளியிட்ட இரண்டு ஆண்டு பதவிக்காலத்துக்கு பதில் மூன்றாண்டுகள் என மாற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று வெளியிட்ட உத்தரவில் அவருடைய பதவிக்காலம் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.
இதன் வாயிலாக அடுத்த வருடம் நவ..18-ஆம் தேதி வரை மிஸ்ரா பதவியில் தொடருவாா் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1984ம் ஆண்டு பிரிவைச் சோ்ந்த இந்திய வருவாய்துறை அதிகாரியான மிஸ்ராவுக்கு 3வது முறையாக பணி நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. மிஸ்ராவின் பதவிக்காலத்தில், காங்கிரஸின் சோனியா காந்தி, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, அவருடைய கணவா் ராபா்ட் வதேரா மற்றும் ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரன், கா்நாடக காங்கிரஸ் தலைவா் டி.கே. சிவகுமாா், மகாராஷ்டிர உள் துறை அமைச்சா் அனில் தேஷ்முக், தேசிய மாநாட்டு கட்சியின் ஃபரூக் அப்துல்லா, ஒமா் அப்துல்லா, ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வா் மெகபூபா முஃப்தி உள்ளிட்டோரிடம் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டது. மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அமலாக்கத்துறை, கருப்புப்பண மோசடி தடுப்புச் சட்டம், தலைமறைவு நிதி மோசடியாளா்கள் சட்டம், அந்நியச்செலாவணி மேலாண்மை சட்டம் உள்ளிட்ட சட்டங்களை நடைமுறைபடுத்தி வருகிறது.