Categories
மாநில செய்திகள்

அமலாக்கத்துறை ஏவிவிட்ட பாஜக…. கண்டனம் தெரிவித்த மு.க.ஸ்டாலின் டுவிட் பதிவு….!!!

அசோசியேட்டது ஜர்னல்ஸ் நிறுவனத்தின் பங்குகளை சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி இயக்குனர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்திருந்தார். அதன்படி சட்டவிரோத பணம் பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆஜராக சம்மன் அனுப்பட்டது. அதன்படி கடந்த 13ம் தேதி டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் ராகுல்காந்தி ஆஜரானார். அப்போது அவரிடம் 9 மணி நேரம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதனைத் தொடர்ந்து நேற்றும் ராகுல்காந்தி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார் இன்றும் அவர் ஆஜராக உள்ளார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து மத்திய பாஜக அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், காங்கிரஸ் கட்சியையும் அதன் தலைவர்களான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரையும் பழிவாங்கும் எண்ணத்தோடு ஒன்றிய அரசு அமலாக்கத்துறை பயன்படுத்தியுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன். அதனைத் தொடர்ந்து நாட்டில் உள்ள மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாத பாஜக இதுபோன்ற அரசியல் திசை திருப்புக நாடகங்களின் மூலமாக தன்னை காப்பாற்றிக் கொள்ளப் பார்க்கிறது. மேலும் அரசியல் தலைவர்களை அரசியல் களத்தில் எதிர் கொள்ள வேண்டுமே தவிர அமலாக்கத்துறை அல்ல” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |