தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அமலாபால். இவர் மலையாளம்,தமி,ழ் தெலுங்கு,கன்னடம் என தென்னிந்திய திரை உலகில் நட்சத்திர நடிகர்களுடன் இணைந்து கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இவர் தற்போது மலையாள இயக்குனர் இயக்குனர் அனூப் எஸ்.பணிக்கர் இயக்கத்தில் ‘கடாவர்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ஹரி உத்தமன், முனீஸ் கான், திரிகன், பசுபதி, நிழல்கள் ரவி, வினோத் சாகர், வேலு பிரபாகர், ஜெயராவ், அதுல்யா ரவி, ரித்விகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அபிலாஷ் பிள்ளை வசனம் எழுதி அரவிந்த் சிங் ஒலிப்பதிவு செய்து இருக்கிறார். இப்படத்திற்கு ரஞ்சித் ராவ் இசையமைக்க ஷான் லோகேஷ் பட தொகுப்பு பணிகளை மேற்கொண்டு உள்ளார்.
அதனைத் தொடர்ந்து க்ரைம் திரில்லர் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த படத்தில் தடவியல் துறை நிபுணரான பத்ரா என்ற கதாபாத்திரத்தில் நடிகை அமலாபால் நடித்துள்ளார். அமலாபாலின் இந்த புதிய பாத்திரம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. இந்த படத்தின் போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 14ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இந்நிலையில் ‘கடாவர்’ திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டிரைலரை இசையமைப்பாளர் அனிருத் தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அந்த டிரைலர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.