Categories
சினிமா தமிழ் சினிமா

“அமலா பால் 2-வது திருமணத்தை மறைத்தாரா…?”…. வெளியான ஆதாரங்களால் சர்ச்சை….!!!!!

நடிகை அமலா பால் தன்னுடைய இரண்டாவது திருமணத்தை மறைத்து பொய் புகார் அளித்துள்ளதாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

தமிழ் சினிமா உலகில் பிரபல நடிகையாக வலம் வருகின்றார் அமலா பால். சென்ற 2014 ஆம் வருடம் இயக்குனர் ஏ.எல்.விஜய்-யை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் 2017 ஆம் வருடம் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தனர். இந்த நிலையில் சென்ற 2016ஆம் வருடம் திரைப்பட தொழில் மூலம் ஜெய்ப்பூரை சேர்ந்த பவ்நிந்தர்சிங் அவர்களுடன் அமலாபாலுக்கு நட்பு ஏற்பட்டு பின்னர் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து நெருகி பழகி வந்தார்கள்.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் அமலாபால் பவீந்தர் சிங் என்பவர் தனக்கு தொல்லை கொடுத்ததாகவும் பணமோசடையில் ஈடுபட்டதாகவும் புகார் கொடுத்தார். அதன் பேரில் விழுப்புரம் போலீசார் பவீந்தர் சிங்கை கைது செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் புகாரில் மேலும் 11 பேரும் பெயர்களும் இருப்பதால் போலீசார் அவர்களையும் தேடி வருவதாக சொல்லப்பட்டது. இதை தொடர்ந்து பவீந்தர் சிங் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அண்மையில் நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. மேலும் அவர் இந்த வழக்கு விசாரணையில் பவீந்தர் சிங் அமலாபாலுக்கும் தனக்கும் நடந்த பதிவு திருமணத்திற்கான சான்றிதழை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததாக செய்தி வெளியானது.

மேலும் நீதிமன்றத்தில் பாவீந்தர் தனக்கும் அமலா பாலுக்கும் திருமணம் நடந்த தேதி மற்றும் இடம் உள்ளிட்ட ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நடிகை அமலா பால் தன்னுடைய இரண்டாவது திருமணத்தை மறைத்து பொய் புகார் அளித்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.

 

Categories

Tech |