திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாட்டால் பக்தர்களுக்கு கோவிலினுள் அனுமதி வழங்கப்படாத நிலையில் பக்தர்கள் கோவில் வாசலில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.
தமிழகத்தில் வேகமெடுத்து பரவி வரும் கொரோனாவை தடுக்கும் வகையில் தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதில் பள்ளிவாசல்கள், கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள் ஆகிய அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாடு செய்வதற்கு அனுமதி கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வழக்கம்போல் பூஜைகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலில் பவுர்ணமி நாளன்று பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம். ஆனால் ஊரடங்கு கட்டுபாடுகள் அமலில் இருப்பதால் பக்தர்களுக்கு கோவிலினுள் அனுமதி வழங்கப்படாத நிலையிலும் பக்தர்கள் தீபம் ஏற்றி, தேங்காய் உடைத்து, கோவில் வாசலில் கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்தனர்.