தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து அந்த பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்துள்ளது.
அதன்படி விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் பின்வருமாறு;-
1. தேர்தல் நடத்தை விதிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. எனவே தமிழ்நாட்டில் அரசு சார்பில் புதிய திட்டங்கள் அறிவிக்க முடியாது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களை செயல்படுத்தலாம்.
2. குடியரசு தின அலங்கார ஊர்தி பேரணி முன்னரே தொடங்கப்பட்டதால் மாநிலம் முழுவதும் செல்வதற்கு அனுமதி உண்டு.
3. தனி நபர் ரூ.50,000 வரை கொண்டு செல்லலாம்.
4. பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகள், பறக்கும் படையினரின் விவரங்கள் நாளை வெளியிடப்படும்.
5. வீடு வீடாக வாக்கு சேகரிக்க 3 பேர் மட்டுமே செல்ல வேண்டும்.
6. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி வாக்குப்பதிவு நடைபெறும்.
7. ஜனவரி 31-ஆம் தேதி வரை பேரணி செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
8. 31,029 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறும். மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க வசதியாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும்.
9. தேர்தல் முகவர்கள் 2 டோஸ் தடுப்பூசி கட்டாயம் செலுத்தியிருக்க வேண்டும்.
10. வெப்பநிலை பரிசோதனை கருவி, சானிடைசர், முககவசம் உள்ளிட்ட 13 பொருட்கள் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் அனுப்பப்படும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.