Categories
ஆன்மிகம்

அமாவாசையின் முக்கியத்துவத்தை உணர்த்து கதை…. வாங்க படிச்சி தெரிஞ்சிக்கலாம்….!!!!

அமாவாசை அன்று முன்னோர்களுக்குத் தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம். அதிலும் தட்சிணாயன துவக்க காலத்தில் வரும் ஆடி அமாவாசை அன்று முன்னோர்கள் வழிபாடு மிகவும் சிறப்பானதாகும். ஆடி அமாவாசை அன்று முன்னோர் வழிபாடு காலையிலேயே துவங்கி விட வேண்டும். அன்றைய தினம் ஏதேனும் ஒரு தீர்த்தக்கரையில் முன்னோர்களுக்கான அமாவாசை தர்ப்பணம் செய்து வர வேண்டும்.அமாவாசையின் முக்கியத்துவத்தை உணர்த்து கதை பற்றி பார்க்கலாம்.

மகாபாரத குருஷேத்ர போருக்கு முன் அதில் வெற்றி பெற எந்த நாளில் கள பலி கொடுக்க வேண்டும் என, மிகச்சிறந்த ஜோதிடரும், பாண்டவர்களில் ஒருவரான சகாதேவனிடம் துரியோதனன் கேட்டான். போரில் தங்களைக் கொல்லத்துடிக்கும் எதிரி துரியோதனன் என அறிந்தும் அவருக்கு பூரண அமாவாசை அன்று களப்பலி கொடுத்தால் உங்களுக்கு தான் வெற்றி என நாள் குறித்து கொடுத்தான்.

சகாதேவன் பொய் சொல்லமாட்டான் என்பதால், துரியோதனன் அமாவாசை அன்று களபலி கொடுக்கத் தயாரானான். அப்போது ஒரு தந்திரம் செய்த கிருஷ்ணர், அமாவாசைக்கு முதல் நாளே ஒரு ஆற்றங்கரையில் அமர்ந்து தர்ப்பணம் செய்தார். இதைப் பார்த்த சூரியனும், சந்திரனும், ஒன்றாக பூலோகம் வந்து, கிருஷ்ண பரமாத்மாவே, நாங்கள் இருவரும் ஒன்றாக சேரக்கூடிய நாள் தானே அமாவாசை. ஆனால் நீங்கள் இன்றே தர்ப்பணம் கொடுக்கிறீர்களே, இது சரியானதா என கேட்டனர்.

அதற்கு கிருஷ்ண பகவானோ, சரிதான் நீங்கள் இருவரும் ஒன்றாக சேரும் போது தான் அமாவாசை . இன்று நீங்கள் இருவரும் சேர்ந்து வந்துள்ளீர்களே அப்போது அமாவாசை தானே என சமயோசிதமாகப் பதிலளித்தார். சகாதேவன் குறித்துக் கொடுத்தபடி களபலி கொடுத்தான் துரியோதனன். ஆனால் அன்று அமாவாசை இல்லாமல் போய் விட்டது. இதனால் நல்லவர்களான பாண்டவர்களுக்கு வெற்றி கிடைத்தது. அமாவாசை தர்ப்பணம் எவ்வளவு முக்கியம் என்பதைப் பாருங்கள்.

Categories

Tech |