Categories
இந்திய சினிமா சினிமா

அமிதாபச்சன் வீட்டிற்கு வெளியே… ராஜ்தாக்ரே கட்சியினர் போராட்டம்…!!!

நடிகர் அமிதாப்பச்சன் தன் வீடு அமைந்திருக்கும் சாலையை விரிவாக்கம் செய்ய நிலம் கொடுக்க மறுத்த காரணத்தினால், ராஜ் தாக்கரே கட்சியினர் அவர் வீட்டின் முன் நடத்தி வருகின்றனர்.

மும்பை ஜுகுவில் அமிதாப் பச்சன் வீடு உள்ளது. அந்த வீடு இருக்கும் சாலையை விரிவுபடுத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. 2017 ஆம் ஆண்டு சாலை விரிவாக்க பணிக்காக அந்த பகுதியில் உள்ள அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அனைவரும் சாலை விரிவாக்கத்திற்கு தங்களது நிலம் கொடுத்து விட்டனர். இதன் காரணமாக சாலை விரிவாக்க பணி 90 சதவீதத்திற்கும் அதிகமாக முடித்து விட்டது. ஆனால் அமிதாப்பச்சன் மட்டும் நிலம் கொடுக்கவில்லை. இதன் காரணமாக சாலை விரிவாக்க பணி முடிக்கப்படாமல் உள்ளது.

இந்த பிரச்சனை பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வருகின்றது. தற்போது ராஜ் தாக்கரே கட்சியினர் இந்த பிரச்சினையை கையில் எடுத்துள்ளனர். அவர்கள் இரவோடு இரவாக அவர் வீட்டின் முன்பு பெரிய பேனர் ஒன்றை வைத்துள்ளனர். அதில் சாலையை விரிவுபடுத்தும் பணிக்கு அமிதாப் பச்சன் (பிக் B) உங்களின் பரந்த மனதை காட்டுங்கள்’ (Big B show Big Heart) என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் நிலத்தை கொடுக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |