அமித்ஷா-அமரீந்தர் சிங் சந்திப்பு சிந்துவுடன் ஏற்பட்ட மோதலுக்கு பின்னர் பஞ்சாப் முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகிய அம்ரிந்தர் சிங் இன்று பாஜக மூத்த தலைவரும் உள்துறை மந்திரியுமான அமித்ஷாவை சந்தித்தார். வேறு எந்த கட்சியிலும் சேரும் திட்டம் தனக்கு இல்லை என்று கூறிவந்த அமரிந்தர் சிங், அமித் ஷாவை இன்று சந்தித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பல்வேறு யூகங்களுக்கு வழி ஏற்படுத்தியுள்ளது. அமித்ஷாவை மரியாதை உடனே அமரீந்தர் சிங் சந்தித்து பேசியிருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் அவர் பாஜகவில் இணைய கூடும் என்று கடந்த சில நாட்களாக வெளிவந்த செய்திகளுக்கு கூடுதல் வலு சேர்க்கும் வகையில் இந்த சந்திப்பு அமைந்துள்ளது.